தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் மேல் நிலவும் மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் 18,06.2024 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

19.06.2024 முதல் 22.06.2024 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ.ள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37? 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியஸ்.

தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read Previous

திருமணமாகாத பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம்..!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Read Next

விளையாட்டு துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும்..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular