தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு – ராகிங் தடுப்பு நடவடிக்கை..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ராகிங் தடை:

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தன்னாட்சி கல்லூரியில் ராகிங் நடைபெற்ற சம்பவத்தை அடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலம் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உறுதிப்படுத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ராகிங் குறித்து மாணவர்களின் புகார்களை எளிதில் பெரும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்படி ராகிங் குற்றம் என்பது குறித்து மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஓட்டப் பந்தயத்தில் சிறுவனுக்கு மாரடைப்பு..!!

Read Next

காதலி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த பிரபலம் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular