தமிழகத்தில் இன்று எங்கெங்கெல்லாம் மழை என்று தெரியுமா..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் அதிகமாகவே இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பை அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்து சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் சென்ற வாரம் ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் மழை பெய்யும் என கணித்தது சரியாகிற்று. அதேபோல் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்தியை தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஈரோடு திண்டுக்கல் நீலகிரி திருப்பூர் சேலம் கோவை மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் சற்று பாதுகாப்பாக இருப்பது மிகவும் நல்லது.

Read Previous

மருத்துவமனையில் பணம் செலுத்தாததால் சிகிச்சை மறுப்பு..!! கர்ப்பிணி பலி..!!

Read Next

மீண்டும் கேப்டன் ஆகும் தோனி..!! ருத்ராஜ்க்கு ஓய்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular