தமிழகத்தில் இன்றைக்கு கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று ஓசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை பொதுவாக வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 -35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 -29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட பகுதிகளில் ஏழு சென்டிமீட்டர் மழையும் கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.