தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் நாளையும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தரின் கணிப்பின்படி, வருகிற 10-12 தேதிகளில் கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 15-ந்தேதிக்குப் பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, 20-ந்தேதிக்குப் பிறகு புயல் சின்னம் உருவாகி பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




