தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து கொண்டு வருகிற நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது…
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 12ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது தமிழகம் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி மட்டும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள நிலையில் எட்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது, மேலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் காற்று மாறுபாடு காரணமாக மிதமான மழையும் வேகமான காற்றும் வீச இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது மேலும் கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது…!!