• September 14, 2024

தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36- 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28- 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் 8 சென்டிமீட்டர் மலையும் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read Previous

உங்கள் ராசி சனி பகவானுக்கு பிடித்த ராசியா..? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!!

Read Next

கஞ்சா விற்பனையாளருக்கும் காவல்துறையினரும் கூட்டணியா..? கஞ்சா குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதா..? அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular