
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழக முழுவதும் 35 ஆயிரத்து 923 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதனை தொடந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்துள்ளார்.
திட்டதற்கான முகமை தொடங்கிய பின் மக்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் “நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான், தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலம் கொண்டுவர உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தமிழக முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் ,கல்லூரி மாணவிகளுக்கான ரூ 1000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.