அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி அமைவது, ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பது பற்றி இபிஎஸ் முடிவெடுப்பார். திமுக அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க வேண்டும் என்றார்.