தமிழகத்தில் ஓலா, ஊபர் வாகனங்களுக்கு தடை?.. வலுக்கும் கோரிக்கை!..

தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்களை தடை செய்து விட்டு அரசே ஆன்லைன் மூலமான சேவையை துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஓலா, ஊபர் வாகனங்களுக்கு தடை:

தமிழகத்தில் ஓலா மற்றும் ஊபர் நிறுவன கார் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த 3 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, விடுமுறை நாட்களில் பயணிகளிடம் இருந்து பெறப்படும் சேவை தொகையில் பாதிக்கு மேல் நிறுவனம் கமிஷனாக எடுத்து கொள்வதாக குற்றச்சாட்டினை வைத்தனர். இதனால், தமிழகத்தில் 80%க்கும் அதிகமான டாக்சிகள் இயங்காத நிலையில் சேவை கட்டணம் ரூ.150வரையிலும் உயர்த்தப்பட்டது. இதனால், கார் டாக்சி மூலமாக செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் மூலமாக புக் செய்து இயங்கும் வாகன முறைகளுக்கு தடை செய்ய வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசே ஊபர், ஓலா போன்ற செயலியை உருவாக்கி, ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்களை புக் செய்து கொள்ளும்படியாக ஆன்லைன் மூலமான பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Read Previous

கோடியில் ஒருவருக்கு தான் நடக்குமாம்..!! ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்..!!

Read Next

ஆவினின் இனிப்பு வகைகள் – ரூ,. 200 கோடிக்கு விற்பனை.. நெருக்கடியில் உரிமையாளர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular