
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் 25,000 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி, மருத்துவத்துக்கு ரூ.1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.
உடல் எடையை குறைக்கும் கிராம்பு டீ..!! தினமும் காலையில் குடிக்கலாமா?..