தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆங்காங்கே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது இதை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்த செய்தியின் படி ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை இருப்பதாக தெரிவித்துள்ளது, அதனை தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் இரவில் 7 மணி வரை 11 மாணவர்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை மையம் அறிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் இரவு 7:00 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கோவை சேலம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது, மேலும் மிதமான மழை மற்றும் காற்றுடன் கூடிய பரவலான மழை மற்றும் மாவட்டங்களில் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..!!