தமிழகத்தில் கன முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி. தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை மழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ,ஈரோடு,கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாளை தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் அதிக கன மழையும், விருதுநகர், திருப்பூர் ,கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் அதிக கன மழை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வாடும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 34 -35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26- 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் 12 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Read Previous

இடமாற்றம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை..!!

Read Next

சத்யராஜ் எங்களை பொறுத்தவரை உண்மையான ஹீரோ தான்..!! செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular