பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்ற முடிந்தது.
இதனிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை பலரை சென்னை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை கூறியது “தமிழகத்தில் அதுவும் மாநில தலைநகரில் இதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது, கொள்கை வேறு வேறாக இருந்தாலும் பாஜக ஆம்ஸ்ட்ராங் கொள்கையை ஆதரிக்கவில்லை. ஒரு கட்சியின் மாநில தலைவர் அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதிலிருந்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்று தெரிய வருகிறது.
நாங்கள் பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்சாங்கின் கொலை வழக்கிற்கு சிபிஐ விசாரணை வழங்க வேண்டும் என கோர உள்ளோம். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்து உள்ளோம். தமிழகத்தில் நடைபெற்ற 17 சம்பவங்கள் குறித்து தேசிய பட்டியலின் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். இங்கு ஒரு கொலை நடந்தவுடன் பெரிய குற்றவியல் வழக்கறிஞர் மூலம் குற்றவாளிகளை சமாதானப்படுத்தும் நிகழ்வு எல்லாம் நடைபெற்று வருகின்றது.
பட்டியலின மக்களுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சென்னை இப்போது கூலிப்படையினர் தலைநகரமாக மாறி உள்ளது. மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையில் 5 பேர் எங்கள் கட்சியிலிருந்து நாளை காலை டெல்லி சென்று இந்த பிரச்சனை குறித்து பேச உள்ளனர்”, என்று அவர் கூறி உள்ளார்.