தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, அதிகமான மக்கள் வெளி ஊர்களுக்கு செல்வார்கள். அதனால் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட். 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
அதனால் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள் என்பதால், தமிழக அரசு ஆகஸ்ட். 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 835 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.