தமிழகத்தில் தடையை மீறி மதுபானம் விற்பனை – புகார் எண் அறிவிப்பு.. மாவட்ட காவல்துறை நடவடிக்கை..!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் எண்:

தமிழகத்தில் அண்மை காலமாக சட்ட விரோதமான செயல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளச்சாராயம் , மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடையை மீறி விற்பனை செய்வது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. தடை செய்யப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் கண்காணிப்பை தாண்டியும் இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது அதாவது சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரம் அறிந்தால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7358154100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல் தெரிவிக்கும் நபரின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – சவரன் ரூ.47,000க்கு விற்பனை..!!

Read Next

ஜனவரியில் 2024-ல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular