தமிழகத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 3,000 கருணைத்தொகை – முதல்வர் உத்தரவு..!!

தமிழக வாணிப கழக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கருணைத்தொகை:

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகளும் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் C, D பணியாளர்களுக்கு பண்டிகை பரிசாக 20 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பண்டிகையை முன்னிட்டு ரூ.3000 கருணைத்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் பணிபுரியும் சுமார் 49,02 ஊழியர்களுக்கு ரூ.23 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Read Previous

மகனைக் கொன்று நாடகமாடிய பெற்றோர், தாய் மாமன் கைது..!!

Read Next

முன்னாள் அமைச்சர் தங்கமணி டிஸ்சார்ஜ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular