
தமிழகத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று (நவ.11) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவ, 13ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும், அடுத்த 36 மணி நேரத்திற்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.