தினசரி சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருவதால், சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கி உள்ளது. குறிப்பாக தக்காளி விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது உருளைக்கிழங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் , கடந்த ஜுன் மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு, இப்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிவடையும் வரைக்கும் விலை அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.