
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டம் எப்பொழுது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பொறியியல் படிப்பு படிப்பதற்கான துணை கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் தொடங்குகின்றன, பன்னிரண்டாம் வகுப்பு பொது, தொழிற்கல்வி பயின்ற சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 4 கடைசி நாளாகும்,www.tneaonline.org மற்றும் www.dte.tn.gov.in ஆகிய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் கலந்தாய்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் பொறியியல் படிப்புக்கான கால அவகாசம் முடிந்த பிறகு மீண்டும் அவகாசங்கள் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது, அருகில் உள்ள இணையதளத்தைச் சென்று பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரிட்டுள்ளது..!!