2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நடந்து முடிந்தது, மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி எண்ண பட்டது, முன்னதாக தேர்தல் தேதி மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது, அப்பொழுது இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தவோ, அறிவிப்புகள் வெளியிடவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வெளியானதை தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
அப்பொழுது அவர் பேசியது “தமிழகத்தில் இருந்து தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பான எந்த ஒரு புகார் இல்லை. மேலும் தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றதாக இதுவரை எனக்கு தகவல் வரவில்லை. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மிகவும் அமைதியான முறையில் தான் நடைபெற்ற முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் இருந்தும் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றுவோம். இதைத் தொடர்ந்து இந்த பதிவேற்ற முடிவுகள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி குடியரசு தலைவர் இடம் அளிப்பார். அதன் பின்னரே மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும். ஏழாம் தேதி காலை தான் நடத்தை விதிகள் திரும்ப பெறப்படும்” என்று சத்யபிரதா ஷாஹு கூறியுள்ளார்.