தமிழகத்தில் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்..!! சட்டசபை மசோதா தாக்கல்..!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று சட்டசபையில் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சியை பொறுப்பேற்ற பின்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 28 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய ஆறு மாநகராட்சிகளும் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் தொழில் நகரமான நாமக்கல், கோவில் நகரமான திருவண்ணாமலை, கல்வி நகரமான காரைக்குடி மேலும் வரலாற்று தலைநகராக விளங்கும் புதுக்கோட்டை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளகா  தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்நகரங்களில் மக்கள் தொகையையும் வருமான அளவுகோலும் அவற்றை மாநகராட்சி ஆக  தரம் உயர்த்த தடையாக உள்ளது- எனவே இந்த வரையறைகளை தளர்த்தி மேற்கண்ட நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட சபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட நகராட்சிகளோடு நகராட்சிகளின் அருகில் உள்ள பேரூராட்சிகள் ,ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளும் ஒன்றிணைந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். இதை தொடர்ந்து இந்த மசோதாவின் மீது நாளை சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

இனி கடுமையான தண்டனை தான்..!! சட்ட திருத்தம் செய்ய முடிவு..!! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

Read Next

SIP-ல் ரூ.5000 முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular