தமிழகத்தில் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் – விவரங்கள் வெளியீடு..!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது ரயில்கள் குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
சிறப்பு ரயில்:

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை அதனை தொடர்ந்து புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.

இது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாம்பரத்திலிருந்து கொல்லத்திற்கு டிசம்பர் 23 மற்றும் 30ஆம் தேதிகளில் பிற்பகல் 1:30 மணிக்கு ரயில் இயக்கப்படும் எனவும் அதே போல டிசம்பர் 24, 31 ஆம் தேதியில் காலை 10:45 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு அதே தேதியில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1ம் தேதி காலை 9.30-க்கு மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

Read Previous

மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – வெளியான ஹாப்பி நியூஸ்..!!

Read Next

ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா தொற்று – பொதுமக்களே உஷார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular