தமிழகத்தில் புகைப்படம் இல்லா சாதி சான்றிதழ் செல்லுமா?.. அதிகாரி விளக்கம்..!!

தமிழகத்தில் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் செல்லாது என்ற தகவல் மக்களிடையே பரவி வருகிறது. இது குறித்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சாதி சான்றிதழ்:

தமிழகத்தில் சில இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என கூறி அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானதா இல்லையா? என்ற குழப்பம் பலருக்கும் நிலவி வருகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் ஜாதி சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் QR கோடுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்களில் புகைப்படங்கள் எதுவும் இடம் பெற்றிருக்காது.

இது குறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது இ சேவை நிறுவன ஊழியர்கள் சாதி சான்றிதழ் குறித்த தவறான புரிதலை பெற்றுள்ளனர். மேலும் பழைய ஜாதி சான்றிதழ்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பழைய சாதி சான்றிதழ் கிழிந்திருந்தாலோ அல்லது தொலைந்து விட்டால் மட்டுமே புதிதாக விண்ணப்பித்து பெறலாம். அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Read Previous

பள்ளி மாணவிகளுக்காக புதிய உத்தரவு – மாநில அரசின் அதிரடி நடவடிக்கை..!!

Read Next

KVB கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலை..!! டிகிரி தேர்ச்சி போதும்.. விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular