
தமிழ் நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டமாக சென்னை (46,81,087) உள்ளது. இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழ் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில் உள்ள 35 மாவட்டங்களில் 21 மாநகராட்சிகளும் 146 நகராட்சிகளும் அடங்கியுள்ளன. இதில், சென்னை மாவட்டம் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. சென்னையைத் தொடர்ந்து முறையே கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் முதலிய நகரங்கள் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களாக உள்ளது.