
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்துள்ளது நிலையில், மக்களின் அத்தியாவசிய வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது இந்த நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக கே என் நேரு கூறியுள்ளார்..
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது அதே போல சென்னையின் பல பகுதியில் பாதிப்படைந்துள்ளன இந்நிலையில் இது குறித்து அமைச்சருக்கே எண் நேரு கூறுகையில் நேற்று ஒரே நாளில் 17 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது ஒரு சில இடங்களில் 30 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால் தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஒரு சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது, மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் மழைக்காலங்களில் வெளியில் வராமலும் மழை நேரத்தில் மின்சாரங்களை தொடாமலும் மரத்தடியில் நிற்காமல் பொதுவெளியில் நடமாடாமல் இருப்பது மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும் கே என் நேரு தெரிவித்துள்ளார்..!!