விரைவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தகவல் வெளியான நிலையில் மதுபிரியர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது. தினசரி 100 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளை பொறுத்த வரை அரசுக்கு வருவாய் வரும் மூலதனமாக இருந்து வருகிறது. இதன் வருவாய் மூலமே அரசு பலவேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் மற்ற நாட்களை விட விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தான் மது வியாபாரம் களைகட்டும். ஏன் சொல்ல போனால் டாப் ஹீரோ படத்தோட வசூலே தோற்று போகும். இந்நிலையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டாஸ்மாக் கடைகளில் வேலை பார்த்து வரும் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வேண்டும் என்றும், ஊதியம் அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்கக் வேண்டும் என்று கூறி வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே போராட்டம் நடைபெறும் நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிற சங்க ஊழியர்களை வைத்து மதுக்கடைகள் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்ட மதுபிரியர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.




