தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருகிறது. மேலும், இத்தொழிற்சாலைகளின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமைய உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த “Schwing Stetter” என்ற சர்வதேச நிறுவனம் ரூ. 600 மதிப்பீட்டில் 52 ஏக்கர் பரப்பளவில் கான்கிரீட் மிக்ஸர், போர் பம்ப் மற்றும் ஹைட்ராலிக் மெஷின் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் ஆலையை அமைக்கவுள்ளது. மேலும், இதன்மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.