
தமிழகத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது, இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதன் தாக்கம் காரணமாக இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் இதனால் பொதுமக்கள் மழைக்காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது..!!