
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை உருவாக்க தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 28ம் தேதி அன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற 28ம் தேதி அன்று 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ , டிப்ளமோ ஆகிய படிப்பை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
இம்முகாமில் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.