
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையம்:
தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் சில மணி நேரம் ஓய்வில்லாமல் அடைமழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்றும் இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை அறிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.