தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம்..!!

ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளில் மேல் கடலோர பகுதிகளின்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும்  மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும்  மணிக்கு முப்பது கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நாளை(05.06.2024)  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் மணிக்கு முப்பது கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் ,தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் 06.06.2024 மற்றும் 07.06.2024 ஆகிய தினங்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் மணிக்கு முப்பது முதல்40 கிலோ மீட்டர் வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read Previous

ஜில்லென்ற இமயமலையில் கூலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!! லேட்டஸ்ட் பிலிம் வைரல்..!!

Read Next

ப்ளூடூத்தில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால் விவசாயி..!! ப்ளூடூத் வெடித்து காது அவுட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular