
தமிழகம் முழுவதும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 430 பொறியியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கைக்கான தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று அறிவித்து உள்ளார். சிறப்பு பிரிவு மாணவர்கள் ஒரு கட்டமாகவும் மற்றும் பொது பிரிவு மாணவர்களுக்கு மூன்று கட்டமாகவும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது
. இதன் படி ஜூலை 22-ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பொது பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
பொது பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 வரையும் நடைபெற இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் 11,804 பொறியியல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளது. தமிழக முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 430 பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.