
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) என்பது இந்தியாவில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் படையாகும். இந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் நாளை (07-03-2025) CISF தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் வருகை தருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நாளை (07-03-2025) ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். எனவே அமைச்சரின் வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும் (06-03-2025) நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.