கள்ளக்குறிச்சி கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 40க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து நடிகரும் இசையமைப்பாளரும் ஜிவி பிரகாஷ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் கள்ளசாராயம் குடித்து பலியானாரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம் ,புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதே போல் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 24 பேரில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக அமைச்சர் தகவல் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து பலியாளரை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும், இந்நிலையில் தமிழக அரசின் அலட்சிய போக்கே இந்த மரணங்களுக்கு காரணம் என்று அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளர் ஆன ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் இது நியாயப்படுத்த முடியாத ஒரு பெரும் குற்றம். இழப்பீடு எதையும் ஈடுகட்டாது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நிகழா வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்”, என்று ஜீவி பிரகாஷ் கோரிக்கை வைத்துள்ளார்.