தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா.!! காரணம் என்னவோ?..

தமிழக முதல்வராக¢ மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், வழக்கறிஞரான ஆர். சண்முகசுந்தரத்தை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்தார்.   இந்நிலையில் தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே அவர் இந்த முடிவை முதல்வரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் முதல்வர் தான் சிறிது காலம் தாமதிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் கூறியிருக்கிறாராம்.

இவர் ஏற்கனவே 1989-91 திமுக ஆட்சியின் போது அவர் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.  அப்படியிருக்க திடீரென அவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வா?.. உயர் நீதிமன்றம் அதிருப்தி..!!

Read Next

தேவாலயத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்திய வாலிபர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular