தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!! பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய முக்கிய அரசியல் தலைவர்..!!

இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை பொது தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் பச்சமுத்து வேட்பாளர் என்பவர் களம் இறங்கி இருந்தார். ஏற்கனவே இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் லட்சக்கணக்கில் அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் இந்திய ஜனநாயக கட்சியில் கூட்டணி அமைத்து இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளார். இந்த தேர்தலின் முடிவில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பச்சையமுத்து ஒரு லட்சத்து 61 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை மட்டுமே தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் தனது பதவியினை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்தால் அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்விக்கு பெற்று பதவியில் இருந்து விலகுவது வழக்கம்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருந்த ராகுல் காந்தி கூட தேர்தலில் தோல்விக்கு பிறகு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

உங்களுக்கு அதிக அளவில் முடி உதிர்வு உள்ளதா..? முடி உதிரவை குறைக்கும் வெந்தய எண்ணெய் செய்வது எப்படி..? இதோ உங்களுக்காக..!!

Read Next

வெளியானது வணங்கான் திரைப்படத்தின் டிரைலர்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular