
சென்னை CWAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Chemist, Lab Technician, Lab Attendant பணிக்கென காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chemist, Lab Technician, Lab Attendant பணிக்கென காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம், 12ம் வகுப்பு, B.Sc / M.Sc degree with Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!!
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ.21,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.03.2025ம் தேதிக்குள் போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/03/20250305100.pdf