தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?.. அறிவிப்பு வெளியீடு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தசரா பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கபட்டுள்ளதை போல தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது வழங்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 3 மாத கோரிக்கைகளுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியாக 4% வழங்கப்பட்டுள்ளது. இதே போல, பல மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு தசரா மற்றும் தீபாவளி பண்டிகை போனஸாக அகவிலைப்படி உயர்வினை வழங்கி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியர்கள் ஆகிய அனைத்து ஊழியர்களுக்கும் 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் எழுத்து வடிவில் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி போனஸாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தமிழகத்தில் புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

Read Next

வங்கியில் வேலை தேடுபவரா?.. ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular