தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு:

தமிழகத்தில் இன்று மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரியும் 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது போக, 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தற்காலிக அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, கன்னியாகுமரியில் இருந்த முதன்மை கல்வி அலுவலருக்கு கள்ளக்குறிச்சியிலும், கள்ளக்குறிச்சி அலுவலருக்கு திருச்சியிலும் என சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பணி மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல, 7 மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தற்காலிகமாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை காலத்திற்கு பிறகும் பதவி உயர்வை நீடுக்கும்படி அலுவலர்கள் உரிமைகோர முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் கட்டாயம் 3 ஆண்டு சிறை – எச்சரிக்கும் கலெக்டர்..!!

Read Next

மின்சார கட்டணங்களில் அரசின் புதிய திட்டம் – முதல்வர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular