தமிழக அரசு மருத்துவமனைகளில் 1400 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1400 மருந்தாளுநர்கள் (Pharmacist) பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசிடம் கோரிக்கை

தமிழகத்தில் சுமார் 1857 அரசு மருத்துவமனைகளில் 1400 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த பணியிடங்களை எம்ஆர்பி முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி அதற்காக பணியாளர்களும் தேர்வு செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் வேலை செய்தவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் காரணமாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.  இதனால் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்வதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் சில மருந்துகளின் தட்டுப்பாடு மருந்தகங்களில் நிலவுகிறது. எனவே அரசு  இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.

Read Previous

தமிழகத்தில் டிச.31ம் தேதி போக்குவரத்து முடக்கம் – காவல்துறை நடவடிக்கை..!!

Read Next

மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.66 வரை உயர்வு – ஜனவரி முதல் அமல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular