ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குரங்கம்மை அதிவேகமாக பரவி வந்த நிலையில் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
காங்கோ மதிய ஆப்பிரிக்கா போன்ற 17க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை அதிவேகமாக பரவி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் குரங்கம்மை தொற்று யாருக்கும் இல்லை என்று தமிழக அரசு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, இது தொடர்பாக அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் படி தோல் அரிப்பு, 2 முதல் 4 வாரம் வரை காய்ச்சல், தலை, தசை வலி, முதுகு வலி, சோர்வு குரங்கு அம்மைக்கான அறிகுறி ஆகும், குரங்கம்மை நோய் மனிதர்களிடம் மட்டுமில்லாமல் விலங்குகளிடமிருந்தும் பரவக்கூடியது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..!!