
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Case Worker 1 & 2, Security, Multipurpose Helper பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker 1 & 2, Security, Multipurpose Helper பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Case Worker 1 & 2 – 5 பணியிடங்கள்
- Security – 2 பணியிடங்கள்
- Multipurpose Helper – 3 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Case Worker 1 & 2 – Bachelor’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology
- Security – விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Multipurpose Helper – எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
- Case Worker 1 & 2 – ரூ.18,000/-
- Security – ரூ.12,000/-
- Multipurpose Helper – ரூ.10,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.20.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2025/02/2025022424.pdf