தமிழக இசை பள்ளி கல்லூரிகளில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!!

தமிழக அரசு கலைக் பண்பாட்டு துறையின் கீழ் 17 மாவட்டங்களில் இசை பள்ளிகள், இசை கல்லூரிகள், கவின் கலை கல்லூரிகள் மற்றும் சிற்பக் கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றது.

இந்த கல்வியகங்களில் 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இசை பள்ளிகளில் மூன்று ஆண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அரசு இசை கல்லூரியில் நேரடியாக மூன்றாம் ஆண்டில் டிப்ளமோ வகுப்பில் சேர்வதற்கு அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்து. இசை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400-/கல்வி உதவித்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் அரசு இசை கல்லூரியில் இசை, நாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளுக்கு மேற்க்கான் கலைகளோடு கிராமிய கலைகளின் பற்றிய படிப்புகளும் உள்ளன.

இசைக்கல்லூரியில் பயிலும்  மாணக்கர்களுக்கு மாதம் ரூ. 500 கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகின்றது. அரசு கவின் கலை கல்லூரிகளில் ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில் நிலங்களை பட்டம் மற்றும் முதுகலை பட்ட படிப்புகளும், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் சிற்ப கலையில் இளங்கலை பட்டம் மற்றும் கோவில் கட்டிடக்கலையில் பீட் டெக்  படிப்புகளும் உள்ளது.

இந்த கல்வி இயக்கங்களில் 2024 -2025 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்பொழுது தொடங்கியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்த விவரம் வயதுவரம்பு மற்றும் கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் http://www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்

Read Previous

ஒடிசா மாநிலத்தில் சோகம்..!! கோவில் திருவிழாவில் வெடி விபத்து..!! 15 பேர் படுகாயம்..!!

Read Next

கூலி தொழிலாளி வங்கிக் கணக்கில் தவறாக செலுத்தப்பட்ட ரூ.32 லட்சம் பணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular