தமிழக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்..!! 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மழை காலம் வந்துவிட்டால் ஊரே வெள்ளக்காடாய் மாறிவிடும். அதற்காக அரசு தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன்படி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன், மேக்நாத்ரெட்டி, உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.




