தமிழக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி – அமைச்சர் விளக்கம்..!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி குறித்த விளக்கங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு:

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு விலக்கை அமல்படுத்துவோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்களுக்கு 11 ம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கலந்து கொண்ட பொது விழா ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் தமிழக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்திவரும் நிலையிலும், அதுவரையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நிதி சுமையை குறைப்பதற்காகவே பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் எந்தவித தவறும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிச்சயம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான விலக்கு பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

காலிஃப்ளவர் புதினா சாதம் செய்து கொடுங்கள்.. குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள்..!!

Read Next

தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை – மாவட்ட ஆட்சியர் வழங்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular