
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை..!! மீறினால் கடும் நடவடிக்கை.. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!!
தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றல் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதற்காக கல்வி நிறுவனங்கள் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணி நியமனம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது சில கல்வி வாரியங்களில் ஆசிரியர்களால் சில முறைகேடுகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, “பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறு ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று குற்றச்சாட்டு எழுந்து நிலையில், இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தொடக்க இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.