
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் யார் என்ற ஆர்வம் அதிகமாகவே நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் இதற்கான தேர்தலின் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. யாரேனும் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியான எம் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை வானகத்தில் இருக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இந்த தேர்தல் நடைபெறப் போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை ஏற்கனவே அறிவித்துள்ளார். அதனால் இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார் என்று கருதப்படுகிறது.
அடுத்த புதிய பாஜக தமிழக தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள சில நாட்கள் தான் இருக்கிறது. அந்த தலைவருக்கு அனைத்து கட்சி தொண்டர்களும் ஆதரவு தெரிவிப்பார்களா என்றும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.