
தற்பொழுது இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி மாறி உள்ளது. இந்த உணவு முதலில் வடமாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மக்களும் அதிக அளவில் பானிபூரி மீது மோகம் கொண்டு உள்ளனர்.
பானிபுரி குறித்து பல கருத்துக்கள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் அதனை சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு கர்நாடகா உணவு பாதுகாப்புத்துறை அதிர்ச்சி செய்தியினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சாலையோரம் உள்ள பானிபூரிகள் தரம் இல்லாமல் இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தினர்.
அதில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்பட்ட பானிப்புரியில் 22 சதவீதம் உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட 260 பாணி பூரி மாதிரிகள் 41 மாதிரிகளின் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள்கள் இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை மேற்கொள்ள உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசாலா, நீரின் மாதிரி போன்றவற்றை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.