தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

தமிழகத்தை ஆட்சி செய்யும் மு க ஸ்டாலின் நிர்வாக திறமைஅற்று  ஆட்சி செய்ய தகுதியற்று நிற்கும் நிலையில் இருப்பதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது  “தொடர்கதையாகியுள்ள கள்ளச்சாராய மரணங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் காதுகளுக்கு கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பங்களின் ஓலங்கள் கேட்கவில்லையா..? முதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஊடகத்தினினரிடம் கள்ளச்சாராயம் குடித்தனர் என்று பேட்டி அளித்துள்ளனர். அதற்கு நேர்மாறாக கள்ளச்சாராயத்தால் உயிர் இழக்கவில்லை என மாவட்ட நிர்வாக ஆட்சியர் விளக்கம் கொடுத்து மூடி மறைக்க பார்த்தது ஏன்..? யாரை காப்பாற்ற இந்த விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் கொடுத்தார்.

இதில் மிகப்பெரிய அளவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளார்கள் என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆங்காங்கே கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்படும் போது அதன் அபாயத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக உள்துறை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் காவல்துறையினரை அழைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்திருக்க வேண்டும். இத்தனை உயிர்கள் பறிபோவதை பார்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கக் கூடாது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மு.க ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார்..? வழக்கம்போல நிவாரணம் தந்துவிட்டால் இழந்தவர்கள் மீண்டும் வந்திடுமா..? மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றமும், மாவட்ட கண்காணிப்பாளரை பணியிட நீக்கவும் செய்துள்ளார் மு க ஸ்டாலின், இவர்களுக்கெல்லாம் நிர்வாகத்தின் தலைமை வகிக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் முதலில் பதவி விலக வேண்டும், கடந்த வருடம் விழுப்புரம், இந்த வருடம் கள்ளக்குறிச்சி, நாளை..? நிர்வாகத் திறஙன அற்று  ஆட்சி செய்ய தகுதியற்று நிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும்”, என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

https://x.com/djayakumaroffcl/status/1803455447950827750?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1803455447950827750%7Ctwgr%5Eec0ed6ab778821a8817ba0ad51ba2bed06d889fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.seithipunal.com%2Ftamilnadu%2Fadmk-jayakumar-say-stalin-should-resign-kallakurichi-kallasarayam

Read Previous

ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கும் போது எதையெல்லாம் எடுத்து செல்லலாம்..? வாருங்கள் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி அவரின் தங்கையை இவ்வாறு பேசியிருந்தால்..? அதிர வைக்கும் டிவிட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular